அனல்பறக்கும் 3ம் கட்டத் தேர்தல் களம்... ம.பி., தேர்தல் நிலவரம் குறித்த பிரத்யேக தகவல்களுடன் நியூஸ்7 தமிழ்!
மக்களவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவு மே. 7-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்தல் செய்திகளை வழங்கி வருகிறது நியூஸ்7 தமிழ் நமது செய்தியாளர் ஆல்வின் சேகரித்த பிரத்யேக தகவல்களை காணலாம்….
18-வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2ம் கட்ட தேர்தல் ஏப். 26-ம் தேதி தேர்தல் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்றது.
அதேபோல் வரும் வரும் மே 7-ம் தேதி கோவா, குஜராத், அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் என மொத்தம் 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 லோக்சசபா தொகுதிகளுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 3வது கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதனால், 3ம் கட்ட தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மக்களின் மனநிலை என்ன? அவர்களின் ஆதரவு யாருக்கு போன்ற விவரங்களை அறிந்துகொள்ள நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளர் ஆல்வின் கள ஆய்வு செய்துள்ளார்.