For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நாளை வெளியாகிறது #Coolie திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்!

07:28 PM Aug 27, 2024 IST | Web Editor
நாளை வெளியாகிறது  coolie திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தின் நடிகர், நடிகர்களை நாளை மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாசர் மற்றும் அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, திரைப்படத்தின் நாடு முழுவதுமான வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாகத் தகவல் வெளியானது. முக்கியமாக, ‘கூலி’ திரைப்படத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து, ‘கூலி’ திரைப்படத்தில்  பாலிவுட் நடிகர் அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்,  ‘கூலி’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களை நாளை மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Advertisement