அமெரிக்க காவல்துறையால் இந்தியர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவின் சான் ஆன்டோனியோவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அமெரிக்க காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சச்சின் சாஹூ. 42 வயதாகும் இவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். இந்நிலையில் தன் அறையில் இருந்த பெண் தோழி ஒருவரை இவர் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்பெண்ணின் புகாரை அடுத்து குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சச்சினை பார்த்த போலீசார் இருவர் அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது சச்சின் தனது வாகனத்தை வேண்டும் என்றே மோதி போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து டைலர் டர்னர் என்ற போலீஸ் அவரை சுட்டதாக கூறப்படுகிறது. போலீஸ் சுட்டவுடன் சம்பவ இடத்திலேயே சச்சின் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பல குற்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த வாரம் கூட இரண்டு இந்திய மாணவர்கள் கார் விபத்தில் இறந்தது குறிப்பிடதக்கது.