For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் வெடிவிபத்து! வாடிக்கையாளர்கள் படுகாயம்!

03:49 PM Mar 01, 2024 IST | Web Editor
பெங்களூரு ராமேஸ்வரம் கபேவில் வெடிவிபத்து  வாடிக்கையாளர்கள் படுகாயம்
Advertisement

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே என்கிற பிரபல உணவகத்தில் சந்தேகத்திற்கு உரிய வகையில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.

Advertisement

பெங்களூரு நகரின் ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபலமான உணவகத்தில் இன்று (01.03.2024) வெடி விபத்து ஏற்பட்டது.  முதற்கட்டமாக சிலிண்டர் வெடித்ததே தீ விபத்துக்கான காரணம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, எ னினும், இந்த சம்பவத்தில் ஐந்து பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்,  மேலும் அவர்கள் படுகாயமடைந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  வெடி விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் அதிமகாக கூடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தால் ராமேஸ்வரம் கபே உணவக வளாகத்தில் சில சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து சேதத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement