பூடானில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு!
2 நாட்கள் பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று பூடான் சென்றடைந்தார். சர்வதேச விமான நிலையம் சென்று இறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் ஷேரிங் டோப்கே ஆரத்தழுவி வரவேற்பளித்தார். பின்னர் அந்நாட்டு ராணுவம் சார்பில் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து பரோவில் இருந்து தலைநகர் திம்பு நோக்கி பயணித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வழி நெடுகிலும் இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளின் கொடிகளை பிடித்தபடி ஏராளமான மக்கள் வரவேற்பளித்தனர். அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி நடனமாடியும் பிரதமர் மோடியை மக்கள் வரவேற்றனர். மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அவரை வரவேற்க வந்திருந்த குழந்தைகளுடன் நடந்து சென்றார்.
இந்த பயணத்தில் இந்தியாவின் உதவியுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள தாய் சேய் நல மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும், பூடான் மன்னர் 4 வது ட்ருக் கியால்போ மற்றும் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
A very memorable welcome in Bhutan! Throughout the way, there were several people who had gathered. I cherish their affection greatly. pic.twitter.com/0BQVVsxmFf
— Narendra Modi (@narendramodi) March 22, 2024