உள்துறை செயலாளர் அமுதா உட்பட 29 அதிகாரிகள் மாற்றம்! 10 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள்!
03:09 PM Jul 16, 2024 IST | Web Editor
Advertisement
தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
தமிழ்நாடு முழுவதும் 19 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 10 ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- 1) எஸ்.மதுமதி (சிட்கோ மேலாண்மை இயக்குநர்) - பள்ளி கல்வித்துறை செயலாளர்
- 2) ஜே. ராதாகிருஷ்ணன் (பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்) - கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
- 3) கோபால் (கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்) - கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
- 4) ஹர் சகாய் மீனா (உணவு வழங்கல்துறை முதன்மை செயலாளர்) - சிறப்பு திட்டத்துறை முதன்மை செயலாளர்
- 5) வீர ராகவ ராவ் (தொழில்நுட்ப கல்வி ஆணையர்) - தொழிலாளர் நலத்துறை செயலாளர்
- 6) குமார் ஜெயந்த் (தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்) - தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தலைமைச் செயலாளர்
- 7) தீரஜ் குமார் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்) - உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்
- 8) அமுதா (உள்துறை முதன்மை செயலாளர்) - வருவாய்த்துறை முதன்மை செயலாளர்
- 9) ராஜாராமன் (வருவாய்த்துறை செயலாளர்) - தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு துறை செயலாளர்
- 10) சுரேஷ்குமார் (தமிழ்நாடு காதி மற்றும் ஊரக தொழில்வாரிய CEO) - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலாளர்
- 11) ரிஷப் (திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர்) - நிதித்துறை துணைச் செயலாளர்
- 12) விஷ்ணு சந்திரன் (ராமநாதபுரம் ஆட்சியர்) - பொதுத்துறை துணை செயலாளர்
- 13) வளர்மதி (ராணிப்பேட்டை ஆட்சியர்) - சமூகநலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல்துறை இணைச் செயலாளர்
- 14) அன்னி மேரி ஸ்வர்னா (அரியலூர் ஆட்சியர்) - உள்துறை இணைச் செயலாளர்
- 15) ஸ்வரன் குமார் ஜடாவத் (கள்ளக்குறிச்சி முன்னாள் ஆட்சியர்) - வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்
- 16) குமரகுருபரன் (பள்ளி கல்வித்துறை செயலாளர்)- பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்
- 17) நர்னவாரே மணீஷ் சங்கர்ராவ் (ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர்) - ஈரோடு மாநகராட்சி ஆணையர்
- 18) விஜயாராணி (கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர்) - பெருநகர சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (கல்வி)
- 19) பாலச்சந்தர் (சேலம் மாநகராட்சி ஆணையர்) - தாம்பரம் மாநகராட்சி ஆணையர்
மாவட்ட ஆட்சியர்கள்
- 1) சந்திரகலா (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் இயக்குநர்) - ராணிப்பேட்டை ஆட்சியர்
- 2) அருணா (நீலகிரி மாவட்ட ஆட்சியர்) - புதுக்கோட்டை ஆட்சியர்
- 3) லட்சுமி பாவ்னா தந்நீரு (வணிகவரித்துறை இணை ஆணையர் ஈரோடு) - நீலகிரி மாவட்ட ஆட்சியர்
- 4) பிரியங்கா (தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி ஆணைய செயல் இயக்குநர்) - தஞ்சை மாவட்ட ஆட்சியர்
- 5) ஆகாஷ் (சிப்காட் செயல் இயக்குநர்) - நாகை மாவட்ட ஆட்சியர்
- 6) ரத்தினசாமி (வணிகவரித்துறை இணை ஆணையர் சென்னை) - அரியலூர் மாவட்ட ஆட்சியர்
- 7) சிபி ஆதித்ய செந்தில்குமார் (நிதித்துறை துணைச் செயலாளர்) - கடலூர் ஆட்சியர்
- 8) அழகுமீனா (தாம்பரம் மாநகராட்சி ஆணையர்)- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்
- 9) கிரேஸ் லால்ரின்திகி பச்சாவு (தொழிற்துறை கூடுதல் ஆணாயர்) - பெரம்பலூர் ஆட்சியர்
- 10) சிம்ரன்ஜித் சிங் கலோன் (நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர்) - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்