Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'திடீரென' கசிந்த அமோனியா வாயு! நடந்தது என்ன? என உரத் தொழிற்சாலை விளக்கம்!

10:37 AM Dec 27, 2023 IST | Web Editor
Advertisement

சென்னையை அடுத்த எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் அமோனியா வாயு வெளியாகி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் உள்ள உர உற்பத்தி ஆலையான கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள ஆலையில் இருந்து அமோனியா வாயு வெளியேறியதால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர்.  கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கப்பலிலிருந்து அமோனியா வாயு எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து அமோனியா திடீரென வெளியேறியதால்தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அமோனியா கசிவால் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தற்காலிகமாக அப்பகுதியில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் சூழல் கட்டுக்குள் வந்ததை அடுத்து பொதுமக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.

இந்நிலையில், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வழக்கமான செயல்பாட்டின் ஒரு பகுதியாக 26/12/2023 அன்று 23.30 மணி அளவில் ஆலை வளாகத்திற்கு வெளியே கரையோரத்திற்கு அருகே அம்மோனியா இறக்கும் சப்ஸீ பைப்லைனில் அசாதாரண சூழல் நிகழ்வதை கவனித்தோம். குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.

​​இதனால் உள்ளூரில் உள்ள சில பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது.  அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.  இயல்பு நிலை திரும்பியுள்ளது. அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.  மேலும், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.  கோரமண்டல் எப்பொழுதும் மிக உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் அவசரகால பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்கிறது.

இவ்வாறு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags :
Ammonia GasAnnouncementChennaiCoromandel International LimitedEnnorenews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduTN Govt
Advertisement
Next Article