For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நிலக்கோட்டை மாரியம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பூப்பல்லக்கில் அம்மன் பவனி விழா!

07:45 AM Mar 21, 2024 IST | Web Editor
நிலக்கோட்டை மாரியம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற பூப்பல்லக்கில் அம்மன் பவனி விழா
Advertisement

நிலக்கோட்டை அருள்மிகு மாரியம்மன் கோயிலின் பங்குனி உற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான மல்லிகை பூ பல்லக்கில் அம்மன் பவனி விழா பாரம்பரிய இசைகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

Advertisement

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த நிலக்கோட்டை அருள்மிகு மாரியம்மன் கோயில். இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உற்சவ விழா. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மல்லிகை பூப்பல்லக்கில் அம்மன் பவனி வரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பங்குனி உற்சவ விழா சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 8 ஆம் தேதி பூச்சொரிதல் உடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனையடுத்து நாள்தோறும் பல வேடங்களில் எழுந்தருளி அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2 தினங்களாக பால்குடம், தீச்சட்டி, காவடி என முக்கிய நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வந்தது. நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் விரதம் இருந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிலையில் நிலக்கோட்டை அருள்மிகு மாரியம்மன் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி, இரவு முழுவதும் நகர் முழுவதும் உள்ள முக்கிய சந்திப்புகளில் நின்று பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்து வருவது வழக்கம்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு சிவப்பு நிற பட்டுடுத்தி மல்லிகை பூவால்
அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு அருள்
பாலித்தார். பூப்பல்லக்கில் அம்மன் பவனியில் வரும்பொழுது நாதஸ்வரம் இசை, உறுமி
இசை, மற்றும் பறையிசை ஒன்றிணைந்து மூன்று இசைகளும் முழங்க பாரம்பரியத்துடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில்
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பூப்பல்லக்கில் வீதி உலா வந்த
அம்மனை தரிசித்தனர். சுமார் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பூ பல்லக்கு ஊர்வலத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags :
Advertisement