Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூன்.8ம் தேதி மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை!

மதுரையில் ஜூன் 8 ஆம் தேதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.
01:30 PM Jun 04, 2025 IST | Web Editor
மதுரையில் ஜூன் 8 ஆம் தேதி பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார்.
Advertisement

2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி தேசிய, மாநில கட்சிகள் பணிகளை தொடங்கியுள்ளன. மதுரையில் ஜூன் 1ஆம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஜூன் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில்
அமித் ஷா பங்கேற்று பேச உள்ளார். அமித் ஷா தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அமைப்பு ரீதியாக 13 பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் 6 அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற உள்ளனர்.

ஒட்டுமொத்த 10,000 பாஜக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி அமித்ஷா ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட உள்ளதால் அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்த வாய்ப்புக்கள் உள்ளது. மேலும், பாஜக வட்டாரங்களில் அமித் ஷாவின் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என கூறுகிறார்கள்.

Tags :
amit shahBJPconsultation meetingMaduraiunion minister
Advertisement
Next Article