Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆனந்த் தெல்தும்ப்டேவின் "முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்" - நூல் அறிமுகம்

01:13 PM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement

மனித உரிமை செயல்பாட்டாளரான ஆனந்த் தெல்தும்ப்டேவின் “முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்” நூல் பற்றிய அறிமுகத்தை காணலாம்.

Advertisement

வெகுஜன அரசியல் களத்தில் செயல்படும் தலைவரை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் செயல்படுவது அரசியலில் சாதாரண விஷயம்தான். அதே நேரத்தில் அந்த தலைவரின் மறைவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்னதாக கட்டமைக்கப்படும் கதைகளை புதிய தலைமுறையினர் பகுத்து ஆய்வது மிக அரிதாகவே நடக்கிறது.

பிரபலமாக அறியப்பட்ட வடிவேலுவின் திரைப்படமான 23ம் புலிகேசி படத்தில் தனக்கு சிக்ஸ் பேக் வைத்த மாதிரி உருவத்தை வரைவதைப் போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் வரக்கூடிய தலைமுறைக்கு இதெல்லாம் தெரியவா போகிறது என வடிவேலு வசனம் பேசியிருப்பார். அது போலத்தான் ஒரு தலைவரைப் பற்றி நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுவதைப் பெரும்பாலும் ஆய்வுக்கு உட்படுத்தி சரிபார்ப்பதில்லை.

அந்த வகையில் இந்திய அரசியல் களத்தில் அம்பேத்கர் குறித்து அவர் சொல்லாத அல்லது குறிப்பிட்ட பொருளில் அவர் சொல்லாத பல விடயங்கள் இன்றைய சமகால அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளன.  அதுபோல முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் பல விமர்சனங்களை முன்வைத்தார் என அவரது பெயரிலேயே இன்றைய பல கட்டுக்கதைகள் உலா வருகின்றன. அது குறித்து விரிவாக அலசுகிறது இந்த நூல்.


இந்த நூலை பிரபலாக அறியப்பட்ட பேராசிரியரான ஆனந்த் தெல்தும்ப்டே எழுதியுள்ளார். ஆனந்த் தெல்தும்ப்டே Economic and Political Weekly, Mainstream மற்றும் Frontier போன்ற முன்னணி பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.  சாதியம், தலித் அரசியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். பீமா கொரோகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது பிணையில் உள்ளார். இவரது மனைவியான   ரமா தெல்தும்ப்டே அம்பேத்கரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஆசிரியர் நூலை ஏறத்தாழ 19 ஆண்டுகள் முன்பே எழுதியுள்ளார். ஆனாலும் இன்றும் இப்புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கட்டுக்கதைகள் பொதுசமூகத்தில் அப்படியே இருக்கின்றன.  11 தலைப்புகளில் முஸ்லிம்கள், பயங்கரவாதம், தேசப் பிரிவினை, பௌத்தம், தேசியம் என 11 கட்டுக்கதைகளை உரிய ஆதாரங்களோடு ஆசிரியர் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.  இப்புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழில் சிங்கராயர் மொழிபெயர்த்துள்ளார். இதனை சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

-ச.அகமது, நியூஸ் 7 தமிழ்

Tags :
Ambedkaranand teltumbdeB R AmbetkarBAPASIbookchennai book fair
Advertisement
Next Article