வழக்கறிஞராக பணியை தொடங்கும் நபர்... அம்பேத்கர் வேடமனிந்து வாழ்த்து தெரிவித்த நண்பர் - மதுரவாயலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
சட்டப்படிப்பு முடித்து பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்த நபருக்கு அவரது நண்பர்
அம்பேத்கர் வேடமனிந்து வந்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் கண்ணன். இவர் இந்த ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து இவர் தமிழக பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். வழக்கறிஞராக தனது பணியை தொடங்க உள்ள கண்ணனுக்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அதனை கொண்டாடும் விதமாக சட்ட படிப்பு முடித்த கண்ணனை அவரது உறவினர்கள் வான வேடிக்கைகளுடன் திறந்த காரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.
இதையும் படியுங்கள் : #WeatherUpdate | சென்னைக்கு 390 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
அக்கம் பக்கத்தினரும் கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கண்ணனின் நண்பர் ஒருவர் யாரும் எதிர்பாராத நேரத்தில் அண்ணல் அம்பேத்கரில் வேடமணிந்து அங்கு வந்தார். அம்பேத்கரில் வேடமணிந்த வந்த நபர் கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாமர மக்களுக்கு சட்ட உதவிகளை செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அவர் அண்ணல் அம்பேத்கர் வேடமனிந்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.