அம்பானி வீட்டுத் திருமணவிழா - அழைப்பிதழ் இல்லாமல் நுழைய முயன்ற 2பேர் கைது!
அம்பானி இல்லத் திருமண விழாவில் அழைப்பிதழ் இல்லாமல் நுழைய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது.
இவர்களுடைய திருமணம் ஜூலை 12ம் தேதி நடைபெற்றாலும் கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. நிச்சயதார்த்தம், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம், ஹல்தி என கடந்த சில மாதங்களாகவே அம்பானி குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஜுலை 12 , 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் திருமணம், சுப ஆசீர்வாத், வரவேற்பு அன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அம்பானி இல்லத் திருமண விழாவில் அழைப்பிதழ் இல்லாமல் நுழைய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருமணத்தின் முக்கிய நிக்ழ்வுகளில் ஒன்றான சுப ஆசிர்வாத் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஆந்திராவில் இருந்து வெங்கடேஷ் நரசைய்யா அல்லூரி என்கிற யூ டியுபரும், லுக்மான் முகமது ஷபி ஷேக் என்கிற தொழிலதிபரும் வந்துள்ளனர்.
ஆனால் அவர்களிடம் முறையான அழைப்பிதழ் இல்லாத நிலையில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து நோட்டீஸ் வழங்கி அனுப்பி வைத்தனர்.