Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அற்புதமான கேப்டன்சி; பேட் கம்மின்ஸை பாராட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின்!

05:12 PM Nov 20, 2023 IST | Web Editor
Advertisement

ஆஸ்திரேலிய அணியைபேட் கம்மின்ஸ் அபாரமாக வழிநடத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பாராட்டியுள்ளார்.

Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாதில் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. 

மேலும்,  6-வது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த நிலையில்,  ஆஸ்திரேலிய அணியை பேட் கம்மின்ஸ் அபாரமாக வழிநடத்தியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் பாராட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:‘அனிமல்’ திரைப்பட டிரைலர் எப்போது? படக்குழு அறிவிப்பு!

இது தொடர்பாக டிம் பெயின் கூறியதாவது..

" ஆஸ்திரேலிய அணி டாஸ் ஜெயித்தபோது பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.  ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பதால்,  அகமதாபாத் மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் கண்டிப்பாக பனிப்பொழிவு இருக்கும் என்பதை அறிந்திருந்தனர்.

மேலும், பனிப்பொழிவு இருக்கும் போது பந்துவீசுவது மிகவும் கடினம் என்பதை உணர்ந்து சாதுரியமாக பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பேட் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு தவறான முடிவுகளையும் எடுக்கவில்லை.

சரியான நேரத்தில் விராட் கோலியின் விக்கெட்டினை எடுத்தார். பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷை அருமையாகப் பயன்படுத்தினார். பேட் கம்மின்ஸ் பந்துவீசிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. அவர் அணியை வழிநடத்திய விதம் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பான பங்களிப்பு என அனைத்துத் துறைகளிலும் அசத்தினார் " டிம் பெயின் தெரிவித்துள்ளார். 

Tags :
Amazing captaincyAustraliancaptainCricketWorldCupformerINDvsAUSpat cumminspraisedTim Paine
Advertisement
Next Article