அமர்நாத் புனித யாத்திரை: முன்பதிவு தொடக்கம்!
அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது.
ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூன் 29 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடைகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்யும் வகையில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மலை மீட்புக் குழுக்கள் சிறப்புப் பயிற்சி பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அமர்நாத் குகையை அடைய பால்டால் வழியாக குறுகிய பாதை, ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாரம்பரிய வழி என பக்தர்கள் 2 வழியாக செல்கின்றனர். இந்த இரண்டு வழிகளிலும் பக்தர்களுக்கு உதவும் வகையில் வீரர்கள் நிறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமர்நாத் புனித யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் 540 கிளைகளில் முன்பதிவு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.