For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மிகப்பரிய ஓப்பனிங் கொடுத்த #Amaran - முதல்நாள் வசூல் இவ்வளவா?

06:38 PM Nov 01, 2024 IST | Web Editor
மிகப்பரிய ஓப்பனிங் கொடுத்த  amaran   முதல்நாள் வசூல் இவ்வளவா
Advertisement

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். மேலும், நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகினது.

இதற்கிடையே, இந்த படத்தின் சிறப்பு காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பார்த்து மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து  ‘அமரன்’ படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார். இந்நிலையில் தன்னுடைய அழைப்பை ஏற்று படத்தை கண்டுகளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

அமரன் படம் சென்னையில் ஒருசில மணிநேரத்தில் 10,000 டிக்கெட் முன்பதிவானது. இதன் மூலம் முதல் நாளில் மட்டும் ஒரு லட்சம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் என்பது நிரூபணமாகியுள்ளது. இதேபோல புக் மை ஷோ வில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்ச டீக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் உலகமுழுவதும் இதுவரை 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. திரைப்படம் வரும் நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

Tags :
Advertisement