For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பெண்ணின் 22வார கருவைக் கலைக்க அனுமதி - #MentalHealth ஐ கருத்தில் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

10:53 AM Aug 20, 2024 IST | Web Editor
பெண்ணின் 22வார கருவைக் கலைக்க அனுமதி    mentalhealth ஐ கருத்தில் கொண்டு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

பெண்ணின் மனநலனை கருத்தில் கொண்டு அவரது  22 வார கருவை கலைக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement

கர்ப்பம் தரித்த பெண்ணின் மனநிலை மற்றும் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரது 22வார கருவை கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதி சஞ்சீவ் நருலா அமர்வு அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது..

"மனுதாரர் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை இருவருக்கும் நியாயமான சூழலைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் 22வார கருவை கலைக்க அனுமதி அளிக்கிறோம். இது  மனுதாரரின் மன நலனிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கருதுகிறது.” என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மனுதாரராக உள்ள பெண் 2016 இல் திருமணம் செய்துகொள்கிறார்.  2017ம் ஆண்டு இந்த தம்பதியருக்கு  ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இதன் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் பெண் குழந்தையை கைவிட்டுவிட்டு அவரது கணவர் சென்றுவிடுகிறார்.  அவர் எங்கிருக்கிறார் என்கிற எந்த தகவலும் மனுதாரருக்கு  தெரியவில்லை.

இதன்  பின்னர் அப்பெண் வேறொரு ஆணுடன் லிவ் இன் உறவில் வாழத் தொடங்கினார். இதன் மூலம் அவர் புதிய கர்ப்பம் தரிக்கிறார். ஆனால் தற்போதைய குடும்ப சூழல் மற்றும் ஏற்கெனவே தனி ஆளாக பெண் குழந்தையை வளர்த்து வருவது உள்ளிட்ட காரணங்களாலும், தான் அனுபவிக்கும் உடல் மற்றும் மனரீதியாக பிரச்னைகளை கருத்தில் கொண்டும் கருவை கலைக்க அப்பெண் முடிவெடுக்கிறார்.

அவரது மோசமான உடல்நிலை மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுத்ததால் கர்ப்பம் தரித்ததை உணரவில்லை என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது கர்ப்பத்தை கலைப்பது குறித்து பல மருத்துவர்களை சந்தித்துள்ளார்.  இது மருத்துவக் கருவுறுதல் (MTP) சட்டத்தின் கீழ் வரம்புகளின்  அனைத்து மருத்துவர்களாலும் மறுக்கப்பட்டது.

பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரின் ஆலோசனையை கருத்தில் கொண்டு பெண்ணின் கருவை 20 வாரங்கள் வரையிலும், Medical Termination of Pregnancy விதிகளின் கீழ் வரையறுக்கப்பட்ட சில பெண்களுக்கு 24 வாரங்கள் வரையிலும் சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்யலாம் உரிமை உள்ளது. கைம்பெண் அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள்,  மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான பெண்கள்  உடல்நலச் சிக்கல்கள் போன்ற காரணங்களால்  20 முதல் 24 வாரங்களுக்குள் ஒரு பெண் தனது கருவை கலைத்துக் கொள்ள எம்டிபியின் விதி 3பி(2) அனுமதி அளிக்கிறது.

இந்த நிலையில்தான் ஏற்கனவே தனது ஏழு வயது மகளை பொருளாதார நெருக்கடிகள் மற்றும் சிரமங்களுடன் வளர்த்து வருவதால், இரண்டாவது குழந்தையை  வளர்ப்பது மிகவும் சிரமம் என்றும் , தனது மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் மோசமாக இருப்பதால் 22வார கருவைக் கலைக்க அனுமதி அளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அப்பெண்ணின் உடல்நிலையை கவனத்தில் கொண்ட உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 13ஆம் தேதி  எய்ம்ஸ் மருத்துவக் குழுவை அமைத்து அவரது உடல்நிலையை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. கருவில் பிறவிக் குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், பெண்ணின் சூழல் அல்லது மற்றும் அவரது மனநலனை கருத்தில் கொண்டு 22வார கருவைக் கலைக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

Tags :
Advertisement