தவெகவுடன் கூட்டணியா? - விஜய் பாணியில் I'm Waiting என பதிலளித்த சீமான்!
2026-ல் விஜயுடன் இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "விஜய் பாணியில் சொல்கிறேன் I'm Waiting" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் "மே 18 இனப் படுகொலை
நாளையொட்டி" இன எழுச்சி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி
உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"வாக்கு பெட்டிகள் வைத்திருக்கும் இடங்களில் எங்காவது சிசிடிவி பழுதானால் சரி,
ஆனால் பல இடங்களில் ஆகிறது என்றால் அதை பற்றி யோசிக்க வேண்டும். சவுக்கு சங்கர் பேசியது தவறு, அதனை மறுக்க முடியாது. குண்டாஸ், கஞ்சா வழக்கு
எல்லாம் தவறு ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் அவரது பேச்சுக்காக பெலிக்ஸ் என்ன செய்தார். அவரை கைது செய்வதில் என்ன நியாயம்.
கேப்டன் விஜயகாந்த் இருக்கும் போது அவருக்கு பத்ம பூஷண் விருது
கொடுத்திருக்க வேண்டும். அதற்கு தகுதியான நபர் அவர். கட்சித் தலைவர், நடிகர்
என்பதை தாண்டி நல்ல மனிதர். தேர்தல் வரை தமிழ் நாட்டில் சீராக மின்சாரம் கொடுப்பார்கள். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் துண்டித்து விடுவார்கள், அனைவருக்கும் தெரிந்தது தான் இது. யார் ஆட்சிக்கு வந்தால் எனக்கு என்ன நடக்க போகிறது? அது குறித்து பேசுவது தேவையற்றது.
திமுக அரசு சாதித்து இருந்தால் மக்கள் தான் பேச வேண்டும். நீங்கள் சொல்ல
வேண்டாம். இது செயல் அரசியலோ அல்லது சேவை அரசியலோ இல்லை, செய்தி அரசியல் தான். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் இருந்து அழைப்பு வந்தால் நான் போவேன். நாட்டின் பிரச்னையே அண்ணனும், தம்பியும் சேர கூடாது என்பது தானே.
விஜயும், நானும் சந்திப்பதில் என்ன பிரச்னை?" என்றார்.
தொடர்ந்து, 2026-ல் விஜயுடன் இணைய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு,
"விஜய் பாணியில் சொல்கிறேன் I'm Waiting" என்று கூறினார்.