Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஊழல் புகார்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர் பதவி விலகல்!

10:26 AM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement

ஊழல் வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஈஸ்வரன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

Advertisement

சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈஸ்வரன், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். 1997-ல் முதல்முறையாக எம்.பியாக தேர்வான பிறகு, 2006 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சேரும் வாய்ப்பினை பெற்றார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும்  இருந்துள்ளார். 2021 ஆம் ஆண்டு  அமைச்சரவையில் இவருக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டது. மேலும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகப் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

இதையும் படியுங்கள் : குஜராத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், சிங்கப்பூா் எஃப் 1 காா் பந்தய விவகாரத்தில் தொழிலதிபா் ஓங் பெங் செங்கிடமிருந்து ஆயிரக்கணக்கான டாலா் மதிப்புள்ள பரிசுப் பொருட்களைப் பெற்றதாக ஈஸ்வரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  நேற்று தனது பதவியை  ராஜிநாமா செய்துள்ளார். இதுகுறித்து அவா் கூறுகையில், 'நான் குற்றமற்றவன். என் பெயருக்கு விளைவிக்கப்பட்டுள்ள களங்கத்தைப் போக்குவதில் இனி கவனம் செலுத்துவேன்' என்றார்.

Tags :
Allegationcorruption caseMinisterresignsSingaporeanTamil descent
Advertisement
Next Article