Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமித் ஷா மீதான குற்றச்சாட்டு - ஜெய்ராம் ரமேஷின் கால அவகாச கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!

09:14 PM Jun 03, 2024 IST | Web Editor
Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகளை விளக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. 

Advertisement

இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று கணிக்கப்பட்ட தேர்தல் பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்தது. இந்த கருத்து கணிப்புகளுக்கு பின் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,

“இதுவரை 150 மாவட்ட ஆட்சியர்களிடம் (தேர்தல் நடத்தும் அலுவலர்கள்) அமித் ஷா பேசியுள்ளார். இது அப்பட்டமான மற்றும் வெட்கக்கேடான மிரட்டல். பாஜக எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளது என்பதை இது காட்டுகிறது. மக்களின் விருப்பமே வெல்லும். ஜூன் 4ம் தேதி மோடி, அமித் ஷா மற்றும் பாஜக வெளியேற்றப்படுவர். இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அதிகாரிகள் எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

அமித்ஷா குறித்த இந்த குற்றச்சாட்டிற்கு இன்று இரவு 7 மணிக்குள் பதில் அளிக்குமாறு ஜெய்ராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க ஒருவாரம் கால அவகாசம் அளிக்குமாறு ஜெய்ராம் ரமேஷ் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற ஜெய்ராம் ரமேஷின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதும், அனைவரையும் சந்தேகிப்பதும் சரியல்ல என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
amit shahBJPCongressElection commissionElection2024jairam rameshParliment Election
Advertisement
Next Article