Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"இந்தியா கூட்டணி என்பது ஜெயில் அல்லது பெயில் கூட்டணி" - சிதம்பரத்தில் ஜெ.பி.நட்டா பேச்சு!

04:19 PM Apr 07, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா கூட்டணி என்பது ஜெயில் அல்லது பெயில் கூட்டணி என சிதம்பரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 

Advertisement

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பாஜக தேசியத் தலைவர் ஜெ. பி.நட்டா அரியலூர் மாவட்டம், கொல்லாபுரம் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசியதாவது,

"பாஜக தமிழ்நாட்டில் தமிழ் பண்பாடு, கலாச்சாரம், அதன் தொன்மை ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.  ஆனால் திமுக தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை அழித்து வருகிறது.  பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை இந்தியாவில் அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்.  அதன் அடிப்படையில் 90 சதவீத மொபைல் போன்கள் தற்பொழுது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலக அளவில் இந்தியா ஆட்டோ மொபைல் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மிக குறைந்த விலையில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.  பிரதமர் மோடி ஏழை மக்களின் முன்னேற்றம்,  படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகள் மற்றும் பட்டியல் இன மக்களுக்கு வாழ்க்கை மேம்பாடு ஆகிய  கொள்கைகளில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இந்தியாவில் 10 கோடி பெண்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 லட்சம் தமிழ்நாட்டிற்கும் 2.5 லட்சம் சிதம்பரம் நாடாளுமன்ற பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  இதுபோன்று ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 11 கோடியே 40 லட்சம் குடிநீர் இணைப்புகளும், தமிழகத்தில் 80 லட்சம் குடிநீர் இணைப்புகளும்,  சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 4 லட்சம் குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் இந்தியா முழுவதும் 4 கோடி வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளன.  இதில் தமிழ்நாட்டில் 14 லட்சம் வீடுகளும்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் 43 ஆயிரம் வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக
கட்டப்பட்டுள்ளன.  மக்களுக்கு முறையான மருத்துவம் சென்றடைய வேண்டும் என்ற பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை இந்தியாவில் 55 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

இது இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதமாகும்.  தமிழ்நாடு பிரதமர் மோடிக்கு மிகுந்த
பாசத்தையும், அன்பையும் தரக்கூடிய மாநிலமாகும்.  இந்த தமிழ்நாட்டிற்காக சுகாதாரத்
துறையில் ரூ.1650 கோடியும், கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.630
கோடியும், கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ.10,840 கோடியும், சல்ஜீவன் திட்டத்திற்கு
ரூ.775 கோடியும் பிரதமர் மோடி வழங்கி உள்ளார்.  ரயில்வே பட்ஜெட்டில்
தமிழ்நாட்டிற்கு ஏழு மடங்கு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை வசதிகள் ரூ.1478 கோடிக்கு மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.  11
நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்றப்படும் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சென்னையும், பெங்களூரும் தொழிற்சாலை காரிடர் நகரங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய
வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

இதே வேளையில் இந்தியாவில் இந்தியா கூட்டணி என்று ஒன்று உருவாகியுள்ளது. இந்த கூட்டணியின் மொத்த கொள்கையே ஊழல்.  பிரதமர் மோடி ஊழலை ஒழிப்பேன் என்று சபதம் இட்டு பணியாற்றி வருகிறார்.  இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலையே முன்னிறுத்தி உள்ளது.  இது அந்த கூட்டணியில் உள்ள அனைத்து
கட்சிகளுக்கும் பொருந்தும்.  இதுபோன்று இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து
கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளன.

இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சிகளின் கூட்டணியாக உள்ளது.  இந்த ஊழலை ஒழிக்கவும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.  தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கார்த்தியாயினி வேலூர் மேயராக இருந்து 24 மணி நேரம் மக்கள் பணியாற்றியவர்.  இவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்."

இவ்வாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.

Tags :
BJPElection2024Elections with News7 tamilElections2024JP Nadda
Advertisement
Next Article