யுஜிசியிடம் விதி திருத்தத்தை திரும்பப்பெற கோரி அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மனு!
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமனத்தில் யு.ஜி.சி.யின் புதிய விதி திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் சுதந்திர செயல்பாட்டை முடக்கும் வகையிலும், பல்கலைகழக நியமனங்களில் மாநில அரசின் அதிகரத்தை பறிக்கும் வகையில் உள்ள விதி திருத்தத்தை பல்கலைக்கழக மானிய குழு திரும்பபெற வேண்டும்; பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியில், மாநில அரசிடம் எந்த விவாதம் நடத்தாமல், அதிகாரத்தை பறிக்கும் யு.ஜி.சி.யின் செயல்பாடு என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
பல்கலைக்கழக சுயாட்சியை நிலைநிறுத்தவும் மற்றும் கல்வி நிர்வாகத்தின் கூட்டாட்சி கட்டமைப்பை மதிக்கும் வகையில் பல்கலைகழக துணைவேந்தர் நியமனம் மற்றும் பேராசிரியர்கள் நியமனங்களிலும் யு.ஜி.சி விதி திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என அகில இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.