"மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"நாகப்பட்டிணம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, செருதூர் மற்றும் வெள்ளப்பள்ளம் ஆகிய 3 பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 10 க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். மீனவர்கள் மீதான இந்த கொடூரத் தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைக் கண்டித்தும், இலங்கை கடற்படையினர் மற்றும் கடற்கொள்ளையர்களை தடுக்கவும் பலமுறை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும், நேரில் சென்று கோரிக்கை வைத்தும் உறுதியான, நிலையான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாகப்பட்டிணம் மாவட்டம், அக்கரைப்பேட்டை, செருதூர் மற்றும் வெள்ளப்பள்ளம் ஆகிய 3 பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதில் 10 க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்துள்ளார்கள். மீனவர்கள் மீதான இந்த கொடூரத் தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ்…
— Selvaperunthagai K (@SPK_TNCC) May 3, 2025
நம் நாட்டில் உள்ள மீனவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு மத்திய அரசு பார்க்கவேண்டும். கடந்த மாதம் இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இருநாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்யவேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.