Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"ஒரு வார காலத்திற்குள் அணைத்து சான்றிதழ்கள் வழங்க வேண்டும்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ உத்தரவு!

சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ அறிவுறுத்தியுள்ளார்.
01:39 PM May 23, 2025 IST | Web Editor
சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் ஒரு வார காலத்திற்குள் வழங்க வருவாய்த்துறையினருக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ அறிவுறுத்தியுள்ளார்.
Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு 107 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட அரசாணை வழங்கினார். அதனை தொடர்ந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்‌ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

Advertisement

"விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவ மாணவியருக்கான சாதிச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. எந்தவித சிரமுமின்றி ஒரு வாரத்திற்குள் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் அணைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ மாணவியர் சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் சம்பந்தப்பட்ட தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்தால் வேண்டிய உதவிகள் செய்யப்படும். இ-சேவை மையத்தில் மாணவ மாணவியர் சான்றிதழ் பெற முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ArupukottaiCertificatesissuedK.K.S.S.R.RamachandranOrdersVirudhunagar
Advertisement
Next Article