For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“அனைத்து சாதியினரும் பயிற்சி முடித்து அர்ச்சகராகி வருகின்றனர்.. திராவிடம் மகிழ்கிறது!” - முதலமைச்சர் #MKStalin பெருமிதம்!

09:52 PM Nov 12, 2024 IST | Web Editor
“அனைத்து சாதியினரும் பயிற்சி முடித்து அர்ச்சகராகி வருகின்றனர்   திராவிடம் மகிழ்கிறது ”   முதலமைச்சர்  mkstalin பெருமிதம்
Advertisement

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றியதாகவும், பயிற்சிப் பள்ளிகள் துவங்கியதாகவும், பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருப்பதால் திராவிடம் மகிழ்கிறது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 115 மாணவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார். இவர்களில் 86 ஆண்கள், 11 பெண்கள் என 97 பேர் அர்ச்சகர்கள் பயிற்சியும், 9 பேர் ஓதுவார் பயிற்சியும், 9 தவில், நாதஸ்வரம் பயிற்சி பெற்று சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.

https://twitter.com/mkstalin/status/1856364040312033760

இந்நிலையில், சான்றிதழ் வழங்கிய நிகழ்ச்சி குறித்த வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கோயில் இருக்கும் தெருவுக்குள் நுழையாதே என்றார்கள். நுழைந்தோம்! கோயிலுக்குள் நுழையாதே எனத் தடுத்தார்கள். நுழைந்தோம்! கருவறைக்குள் நுழையத் தகுதி உண்டா என ஒதுக்கினார்கள். நுழைவோம் என்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகச் சட்டமியற்றினோம்; பயிற்சிப் பள்ளிகள் துவங்கினோம்! பயிற்சி முடித்துப் பலரும் வந்துகொண்டிருக்கிறார்கள். திராவிடம் மகிழ்கிறது! இவர்களைத் தடுக்க ஏற்படுத்தப்படும் அத்தனை தடைகளையும் உடைப்போம்; சமத்துவத்தை நிலைநாட்டுவோம்!" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement