For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மனிதர்களுடன் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன” - ஹார்வர்டு பல்கலை. ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

03:38 PM Jun 14, 2024 IST | Web Editor
“மனிதர்களுடன் ஏலியன்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன”   ஹார்வர்டு பல்கலை  ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
Advertisement

ஏலியன்கள் பூமியில் மனிதர்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement

பூமிக்கு வெளியே எதாவது உயிரினங்கள் உள்ளனவா என்பதே ஆய்வாளர்கள் மத்தியில் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இவ்வளவு பெரிய கேலக்ஸியில் பூமியைத் தவிர நிச்சயம் மற்ற இடங்களிலும் வேறு உயிரினங்கள் வாழும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இந்த ஏலியன்கள் எப்படி இருப்பார்கள்.. மனிதனை விடத் தொழில்நுட்பத்தில் முன்னேறியவர்களா இருப்பார்களா.. பார்க்க நம்மைப் போல இருப்பார்களா.. அல்லது வேறு வகையில் இருப்பார்கள் எனப் பல கேள்விகள் உள்ளன. அப்படி வேறு கிரகத்தில் இருக்கும் நாகரீகம் நம்மைப் போல அல்லது நம்மைக் காட்டிலும் அதிக அறிவை பெற்றிருந்தால்.. அவர்கள் ஏன் நம்மைத் தொடர்புகொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த பிரபஞ்சத்தில் தற்போதைய அறிவியல் நிலவரப்படி உயிர்கள் வாழும் ஒரே கிரகமாக பூமி மட்டுமே உள்ளது. ஆனாலும் நாம் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் வேறு சில கிரகங்களில் நம்மைப்போல உயிரினங்கள் வாழலாம் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்து வருகிறது. அந்த வெளிக்கிரக உயிர்களை குறிக்கும் சொல்தான் ஏலியன்.

உலகிலேயே ஏலியன் குறித்த கற்பனைகள் அதிகம் உலாவும் நாடு அமெரிக்கா. ஏலியன்கள் படையெடுப்பை மையப்படுத்தி அமெரிக்காவில் ஏராளமான கதை புத்தகங்கள், காமிக்ஸ், திரைப்படங்கள் ஆண்டுதோறும் வெளியாகின்றன. மேலும் சிலர் அவ்வபோது வானத்தில் மர்மமாக தோன்றும் சில காட்சிகளை படம்பிடித்து ஏலியன் விண்கலம் என பதிவிடுவதும் நடக்கிறது. ஆனால் இதுவரை பூமியில் ஒரு ஏலியனின் சடலம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், பூமியில் ஏலியன்கள் மறைமுகமாக வாழ்ந்து வருவதாக அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைகழகம் சமீபத்தில் ஏலியன் குறித்து ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. முன்னதாக மெக்சிகோ நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மெக்சிகோவில் நடந்த இந்த ஏலியன்ஸ் கண்காட்சி வேற்றுக்கிரகவாசிகள் மீதான ஆர்வத்தை மக்களிடம் மேலும் அதிகரித்தது. இதற்கிடையில், வேற்றுகிரகவாசிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கலாம்,  ஒருவேளை நிலவுக்குள் ஆழமான ஒரு மேம்பட்ட தொழில்நுட்ப நாகரிகத்தில் வசிக்கலாம் அல்லது ஒருவேளை, நிலவின் உள்ளே இருக்கலாம் என்று பல்வேறு கூற்றுகளை அந்த ஆராய்ச்சி அறிக்கை முன்வைத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மனித வளம் பெருக்கும் திட்டம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். அந்த ஆய்வறிக்கையில், “பூமியில் பாதாள சுரங்கம் போன்ற மனிதர்கள் செல்ல முடியாத பகுதிகளில் ஏலியன்கள் ரகசிய வாழ்க்கை நடத்தி வரலாம். நிலவில் அல்லது மனிதர்களிடையே அவர்கள் நடமாட முடியும். அவை, பூமிக்கு அவ்வப்போது வந்து செல்ல முடியும். ஏலியன்கள் மனித உருவெடுத்து நம்மிடையே கூட வசித்து வரலாம்” என கூறும் ஆராய்ச்சியாளர்கள், இவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கை ஏலியன் நம்பிக்கையாளர்களிடையே பெரும் ட்ரெண்டாகியுள்ளது. ஏலியன்கள் பல காலமாக பூமியில் மனிதர்களுக்கு தெரியாமல் வலம் வந்த நிலையில் அவை இங்கே வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு விட்டதாகவும், மனிதர்களோடே வசித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags :
Advertisement