For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித் - சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘விடாமுயற்சி’ படக்குழு!

11:52 AM Aug 03, 2024 IST | Web Editor
திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்   சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ‘விடாமுயற்சி’ படக்குழு
Advertisement

நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, ‘விடாமுயற்சி’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Advertisement

கடந்த 1990 ம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகர் அஜித்.  இப்படத்தில் அவர் பள்ளி மாணவராக நடித்திருந்தார்.  பின்னர் 1993 ல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார்.  இதனையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, வலிமை என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.

இவர் தற்போது இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கி வரும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.  இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கியது.

இதனிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் இணைந்தார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியது.  இதில் கிளைமாக்ஸ் உட்பட முக்கிய காட்சிகள் படம் ஆக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 30 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் அஜர்பைஜான் ஷெட்யூல் நிறைவடைந்தாக ஜூலை 22ம் தேதி படக்குழு அறிவித்தது.  இது தொடர்பாக சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தது.  அதில் நடிகர் அஜித் உட்பட படக்குழுவினர் இடம்பெற்றிருந்தனர்.  இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 32 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு ‘விடாமுயற்சி’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Tags :
Advertisement