பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் குடும்பத்துடன் சாமி தரிசனம் : இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ள அஜித் தமிழ் சினிமாவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்ட நடிகராக உள்ளார்.
இவர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித் குமார் நடிப்பு மட்டுமின்றி ரேஸிங்கிலும் ஆர்வம் கொண்டவர். சொந்தமாக ரேஸிங் பந்தய நிறுவனத்தையும் அவர் உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோயிலில் நடிகர் அஜித்குமார் தன் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவருடன் ரசிகர்கள் பலர் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


