For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் பெயர் வெளியீடு..!

05:32 PM Jan 10, 2024 IST | Web Editor
ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படத்தின் பெயர் வெளியீடு
Advertisement

ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிபபடத்திற்கு “சிஸ்டர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

துவாரகா புரடக்‌ஷன் பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் உருவாகும் புதிய திரில்லர், காமெடிப்படத்திற்கு “சிஸ்டர்” எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

திரைப் பிரபலங்கள் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் அருண் ராஜா காமராஜ், இயக்குநர் சாம் ஆண்டன், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை சமூக வலைதளங்கள் மூலம்  இன்று வெளியிட்டனர். ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்தின் பெயரை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது படக்குழு.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கி, தீவிரமாகப் நடந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.

அறிமுக இயக்குநரான ரா.சவரி முத்து, வித்தியாசமான திரைக் கதையோடு, கலக்கலான காமெடி கலந்த எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரஸ்யமான படைப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை  கலகலப்பான காமெடியுடன், பரப்பரப்பான திரைக்கதையாக இப்படத்தின் கதை  அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement