For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

காற்று மாசுபாடு எதிரொலி - மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!

09:45 AM Nov 03, 2023 IST | Jeni
காற்று மாசுபாடு எதிரொலி   மூச்சுத்திணறல்  சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு
Advertisement

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்மையில் டெல்லியின் காற்று தரக்குறியீட்டு அளவு 309 புள்ளி என்ற அளவில் மிக மோசமான நிலையை எட்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் காற்று மாசுபாடு குறையாததால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : களமிறங்கிய IT அதிகாரிகள் - தனியார் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை!!

காற்று மாசுபாடு அதிகரிப்பால், டெல்லியில் அவசர கால சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் குறைந்து வருகிறது. இதனால், மூச்சுத்திணறல், சுவாச கோளாறு என உடல்நலக்குறைவு ஏற்பட்டு டெல்லி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement