For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

04:11 PM Nov 11, 2023 IST | Web Editor
டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு  நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை
Advertisement

டெல்லியில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளதால், அங்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

தலைநகர் டெல்லியில் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது.  மக்கள் சுவாசிக்கவே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.  தலைநகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  அதோடு டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் பயிர் எச்சங்களை விவசாயிகள் எரிப்பதால் டெல்லியை புகை மூட்டங்கள் சூழ்வது வழக்கமாக உள்ளது.

இதனை தடுக்க டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர் எச்சங்களை விவசாயிகள் எரிக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காற்று மாசை எதிர்கொள்ளும் வகையில் டெல்லி வாழ் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து டெல்லி சுகாதாரத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • கர்ப்பிணிகள்,  மூத்த குடிமக்கள்,  குழந்தைகள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள் போக்குவரத்து அதிகம் உள்ள, தொழிற்சாலைகள் உள்ள மற்றும் காற்றுமாசு அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • குறிப்பாக கடுமையான காற்றுமாசு உள்ள நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி  மற்றும் உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
  • புகையிலை பொருட்களை புகைக்க வேண்டாம்.  கொசு விரட்டி சுருள்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.  மரம்,  இலைகள் மற்றும் பயிர் எச்சங்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.
  • மக்கள் தங்கள் கண்களை தண்ணீரில் கழுவ வேண்டும்,  வெதுவெதுப்பான நீரில் அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும் மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்.
  • மூச்சுத் திணறல்,  மயக்கம்,  இருமல்,  மார்பு அசௌகரியம் அல்லது வலி, கண்களில் எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
  • பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதோடு,  காரை பயன்படுத்துவதாக இருந்தால் பலர் சேர்ந்து ஒரே காரை பகிர்ந்து பயன்படுத்த வேண்டும்.
  • வீடுகள் மற்றும் பணியிடங்களுக்குள் துடைப்பதற்குப் பதிலாக ஈரமான துடைப்பதை கொண்டு சுத்தம் செய்யும் முறையை கையாள வேண்டும்.
  • டெல்லி பல நாட்களாக கடுமையான காற்றின் தரக் குறியீட்டைப் பதிவுசெய்து, வெள்ளிக்கிழமை வரை, மழையால் நகரத்தின் காற்றைச் சுத்தப்படுத்தியது.

காற்றின் தரக்குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட அளவில் இருந்தால் அது நல்லது.

காற்றின் தரக்குறியீடு 51 - 100  அளவு இருந்தால் திருப்திகரமானது.

காற்றின் தரக்குறியீடு 101 - 200 அளவு இருந்தால் மிதமானது.

காற்றின் தரக்குறியீடு 201 - 300  அளவு இருந்தால் மோசம்.

காற்றின் தரக்குறியீடு 301 - 400 அளவு இருந்தால் மிகவும் மோசமானது.

காற்றின் தரக்குறியீடு 401 - 450  அளவு இருந்தால் கடுமையானது.

காற்றின் தரக்குறியீடு 450க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையானது.

இந்நிலையில், இன்று (11.11.2023) காலை 7 மணியளவில், டெல்லி நகரின் காற்றின் தரக் குறியீடு 219 ஆக இருந்தது.

Tags :
Advertisement