Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்களுக்கு அவதி!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
08:29 AM Dec 13, 2025 IST | Web Editor
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
Advertisement

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

Advertisement

இந்த நிலையில் டெல்லியில் உள்ள சன்சாத் மார்க் பகுதியில், காற்று தர குறியீடு மிக மோசம் (356) என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவல் உறுதிப்படுத்தி உள்ளது.. மேலும் காலையில் பனி படர்ந்து தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, சுவாச கோளாறுகளும் அதிகரித்து காணப்படுகின்றது.

மேலும் இந்த நகரின் பல்வேறு பகுதிகளிலும் பனிப்போர்வை போத்தியது போல் கட்சி அளிக்கிறது. இதனால், வாகனங்கள் சாலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை காணப்படுகிறது. குளிர்காலம் தொடங்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் அதற்கு முன்பே பல பகுதிகளிலும் பனி மூட்டமும் அதிகரித்து காணப்படுகிறது. காற்று மாசு அதிகரித்ததன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

Tags :
Air pollutionDelhiDelhiAir pollutionIncrease
Advertisement
Next Article