For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு -காற்றின் தரக்குறியீடு 236 வரை உயர்வு!!

08:22 PM Nov 12, 2023 IST | Student Reporter
சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு  காற்றின் தரக்குறியீடு 236 வரை உயர்வு
Advertisement

சென்னை,  செங்கல்பட்டு மற்றும்  கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று இடங்களில்  காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையில்  பதிவாகியுள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் காலையில் இருந்து பட்டாசு வெடித்து வருவது, காற்றின் போக்கு உள்ளிட்ட காரணங்களால்   3 இடங்களில் காற்றின் தர குறியீடு 200- ஐ தாண்டியது. சென்னையில் பல்வேறு இடங்களில் காற்று தரக் குறியீடு 100 முதல் 236 வரை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக, ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம். இதய நோய் உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

காற்றின் தரக்குறியீடு சென்னையில் அதிகபட்சமாக,

மணலியில் 236

பெருங்குடியில் 227

அரும்பாக்கத்தில் 175

ராயபுரத்தில் 143

கொடுங்கையூரில் 128

ஆலந்தூர் 201

வேளச்சேரி 194

என்ற அளவில்  காற்றின் தரம் மிக மோசமடைந்து வருகிறது. இதைத் தவிர்த்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 236 என்ற அளவில்  காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

செங்கல்பட்டில் 211

வேலூரில் 162

கடலூரில் 162

சேலம் 122

ராமநாதபுரம் 121

புதுச்சேரியில் 164

தொடர்ந்து காற்றின் தரத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

Tags :
Advertisement