For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

2025-ல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்கும் ‘ஏர் கேரளா’!

06:17 PM Jul 09, 2024 IST | Web Editor
2025 ல் உள்நாட்டு விமான சேவைகளை தொடங்கும் ‘ஏர் கேரளா’
Advertisement

‘ஏர் கேரளா’ 2025-ஆம் ஆண்டில் உள்நாட்டு சேவைகளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement

கேரள முதலமைச்சராக இருந்த உம்மன் சாண்டியால் 'ஏர் கேரளா' விமான திட்டம் கடந்த 2005ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் வாழும் மலையாள மக்களின் கனவு திட்டமாக இது அறியப்பட்டது. வளைகுடா நாடுகளுக்கு குறைந்த செலவில் விமான சேவை இயக்குவதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம் நினைத்தபடி கைகூடவில்லை.

இருப்பினும், கேரளாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடாவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர்களான அஃபி அஹமது மற்றும் அயூப் கல்லடா இருவரும் இந்த திட்டத்தை தொடங்க ஆர்வம் காட்டினார்.  கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு ஏர் கேரளா விமான நிறுவனத்தை உருவாக்கினார்.

தொடர்ந்து ஏர் கேரளா இணையதள டொமைனை கைப்பற்றி நிறுவனத்தை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டினர். அதன்படி, கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் கழித்து அது சாத்தியமாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர் கேரளா விமான நிறுவனம் தொடங்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதன் மூலம் ஏர் கேரளா நிறுவனம் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மூன்று விமானங்களுடன் தொடங்கப்படும் விமான சேவை பின்னர் படிப்படியாக வளைகுடா நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.   இதுகுறித்து அயூப் கல்லடா கூறுகையில், "கேரளாவில் நான்கு விமான நிலையங்கள் இருந்தாலும்,  சொந்த விமான நிறுவனம் இல்லை. அந்தக் குறையை எங்கள் நிறுவனம் போக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement