Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான்" - சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி!

பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
11:33 AM Aug 30, 2025 IST | Web Editor
பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான் என்று சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
Advertisement

ஒசூரில் சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "டிரம்ப் - மோடி நட்பு நாட்டிற்கு எவ்வித பிரயோஜனம் இல்லை, 25% அபராத விதியை ரத்து செய்யக்கோரி செப்டம்பர் 5ம் தேதி மூன்று இடதுசாரிகள் சார்பில் தமிழக தொழிற்மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.
செப்டம்பர் 2ல் இந்திய கூட்டணி சார்பில் மத்திய அரசு ஆயத்த ஆடை திருப்பூர் தொழிலை மேம்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெறும்.

Advertisement

நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் என்பது திமுக வாக்குறுதி, 4.5 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றுகிறார்கள். ஆனால் இதுபோதுமானது அல்ல, குவிண்டாலுக்கு 3000 ரூபாய் வழங்க வேண்டும். கொள்முதல் செய்யும் நெல் பாதுகாக்க கிடங்குகள் தேவை, கடந்த காலங்களில் நெல் மழையில் நனைந்து வீணானது. திமுக ஆட்சியிலும் நடந்தது நெல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகள் கோறும் இடங்களில் நிறுவ வேண்டும்.

அரசு மருத்துவர்களின் கோரிக்கை முன்வைத்ததற்காக மருத்துவ சங்க தலைவரை பழி வாங்கல் நடவடிக்கையாக சென்னையிலிருந்து நாகப்பட்டினம் மாற்றப்பட்டுள்ளார். இது அரசிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். அமைப்பின் தலைவர் என தலைவர்களின் மீது நடவடிக்கை எடுத்தால் எப்படி சரியாகும், இடமாற்றத்தை இரத்து செய்து, மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஒசூர், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் கழிவுநீரால் நீர், நிலம் கெடுகிறது. நீரை சுத்திகரிப்பதுடன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தமிழக அரசு கர்நாடகா மாநில அரசுடன் பேசி முடிவெடுக்க வேண்டும். தொடர்ந்து கோரிக்கை வைத்தும் தமிழக அரசு முன்வரவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விளை வீழ்ச்சி என்றபோது, ஆந்திராவை போல தமிழக அரசு ஊக்கதொகை வழங்கிட கோரிக்கை விடுத்தோம். அண்டை மாநிலங்களில் கிலோ 4 முதல் 12 ரூபாய் வரை ஊக்கதொகை கொடுத்து காப்பாற்றி உள்ளனர். தமிழக அரசு அறிவித்ததையும் செய்யாதது ஏற்புடையதல்ல. வரும் காலங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு விலை வீழ்ச்சி, விலை உயர்விலிருந்து காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிறைய கருத்துக்கணிப்புக்கள் வெளியாகும், அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் சில கருத்துக்கணிப்புக்கள் வரும் இதனை வைத்து சொல்ல முடியாது. திமுக சந்தித்த மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக ஒன்றிணைய சசிகலா அழைப்பு பிரம்மாவிற்கு மூன்று முகங்கள் போன்று டிடிவி, இபிஎஸ், ஓபிஎஸ் என முகங்களை திருப்பிக்கொண்டுள்ளனர். இதில் இபிஎஸ்க்கு விருப்பம் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான முயற்சி வெளிப்படையாக தெரியவில்லை, இணைந்தாலும் திமுகவை வெற்றி பெற முடியாது. தமிழக அரசியல் பாஜக உடன் இணைந்த அதிமுகவிற்கு பாதிப்பு தான். இதே கூட்டணி தான் 2021 ல் தேர்தலை சந்தித்தார்கள். தற்போது மட்டும் என்ன பலம் பெற்றிருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AIADMKBJPCPM State SecretaryDMKHosurPressMeetShanmugam
Advertisement
Next Article