"அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்" - இபிஎஸ் அறிவிப்பு
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, தவெக உள்பட தமிழநாட்டில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : “தமிழர்களுக்கு மொழி உணர்ச்சி குறித்து ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி பதிலடி
இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கருத்துக்களை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம். தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான்" என தெரிவித்தார். இதனிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் கட்சி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.