For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“கூட்டணி குறித்து தெளிவான முடிவு வரும் வரை தேவையற்ற கருத்துகள் வேண்டாம்" - அதிமுக தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

12:24 PM Feb 09, 2024 IST | Web Editor
“கூட்டணி குறித்து தெளிவான முடிவு வரும் வரை தேவையற்ற கருத்துகள் வேண்டாம்    அதிமுக தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை
Advertisement

கூட்டணி தொடர்பான தெளிவான முடிவுகள் வரும் வரை தேவையற்ற பேச்சுக்களை அதிமுகவினர் தவிர்க்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன்  எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisement

கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள CMC காலனியில் ஆழ்துளை கிணறு திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும்,  கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

“ஆள்துளை கிணறு அமைத்து சிஎம்சி காலனியில் நீண்ட நாள் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளோம்.  மாநகராட்சியில் ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பாக அதிகாரிகள் அதற்கான பணி அறிவிப்பு பலகையை அந்தந்த பகுதியில் வைக்க வேண்டும்.  கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.  மாநகராட்சி மேயர் இதை கண்டு கொள்கிறாரா என தெரியவில்லை.

வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கோவையின் பிரச்னைகளை எடுத்து கூற உள்ளேன். உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் மக்களுடன் சென்று அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.  தமிழ்நாட்டை விட பின்தங்கி இருந்த மாநிலங்கள் தற்போது முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது.  தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் விதிப்பதால்,  மத்திய அரசின் வளர்ச்சிப் பணிகள் தமிழ்நாட்டில் தாமதம் ஆகிறது. தமிழ்நாடு அரசால் கோவை விமான நிலையப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள விமான நிலைய நடவடிக்கையை மட்டுமே மத்திய அரசு அமல்படுத்த முடியும்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 10 ஆண்டுகள் குறித்து வெள்ளை அறிக்கையை கொடுத்திருக்கிறார்.  அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக,  சமமான நிதி பங்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.  பாஜக ஆட்சி செய்யக் கூடிய மாநிலங்களை விட,  அதிகமான நிதி தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டிற்கு அதிக நிதி வருவாயை ஈட்டிக் கொடுப்பது கொங்கு மாவட்டங்கள்.

பொது சிவில் சட்டங்களை பெண்களுக்கு நீதி கிடைக்கும் சட்டமாக பார்க்க வேண்டும். பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் என்கிற வகையில் நான் வரவேற்கிறேன்.  அரசியலில் தனிப்பட்ட தாக்குதல் இருக்கக் கூடாது.

கூட்டணி தொடர்பான தெளிவான முடிவுகள் வரும் வரை தேவையற்ற பேச்சுக்களை அதிமுகவினர் தவிர்க்க வேண்டும்.  பாஜக புறக்கணிக்க முடியாத ஒரு அரசியல் சக்தியாக தமிழ்நாட்டில் மாறி வருகிறது.  பாஜகவை, மோடியை எதிர்த்தவர்கள் தற்போது பாஜகவில் இணைந்து வருகிறார்கள்”

இவ்வாறு வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேசினார்.

Tags :
Advertisement