ஹோம் கிரவுண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய RCB - சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 219ரன்கள் இலக்கு!
ஹோம் கிரவுண்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய RCB அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு 219ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 67 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா அணி முதலாக முன்னேறியது. அதனையடுத்து ராஜஸ்தான் அணி முன்னேறியது. பஞ்சாப், குஜராத், மும்பை அணிகள் அதற்கான தகுதியினை இழந்தன.
இதையும் படியுங்கள் : இந்தியன் 2 வெளியாகி அடுத்த 6மாதத்தில் இந்தியன் 3 – CSK போட்டியிடையே சர்பிரைஸ் அப்டேட் கொடுத்த நடிகர் கமல்ஹாசன்!
இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று 68வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் முதலில் பேட்டிங்க் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி துவக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் எண்ணிக்கையை அதிகரித்தது.
30ரன்களுக்கு மேல் எடுத்திருந்த நிலையயில் மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்ற பின் களமிறங்கிய ஆர்சிபி வீரர்கள் அதிரடியாக விளையாடி ஸ்கோர் எண்ணிக்கையை உயர்த்தினர். இதனைத் தொடர்ந்து விராட் கோலி 47ரன்களுக்கு டேரில் மிட்சல் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பட்டிடாருடன் கரம் கோர்த்த டூப்ளெசிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் சேர்ந்த பட்டிடார் மற்றும் இருவரும் பந்துகளை பவுண்ட்ரி மற்றும் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டனர். 20ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட்களை இழந்து 218ரன்களை குவித்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.