For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: 17 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

11:37 AM Mar 21, 2024 IST | Web Editor
அதிமுக 2 ம் கட்ட வேட்பாளர் பட்டியல்  17 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
Advertisement

அதிமுகவின்  2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்  இன்று வெளியானது 17பேர் கொண்ட பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Advertisement

ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.  தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய  தீவிரம் காட்டி வருகின்றன.

இதையும் படியுங்கள் : 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக - இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவின் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் :

  1.  வடசென்னை - ராயபுரம் ஆர்.மனோ
  2.  தென்சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்
  3.  காஞ்சிபுரம் - ராஜசேகர்
  4.  அரக்கோணம் - ஏ.என்.விஜயன்
  5.  கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
  6.  ஆரணி - கஜேந்திரன்
  7.  விழுப்புரம் - பாக்யராஜ்
  8.  சேலம் - விக்னேஷ்
  9.  நாமக்கல் - கவிமணி
  10.  ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
  11.  கரூர் - தங்கவேல்
  12.  சிதம்பரம் - சந்திரகாசன்
  13.  நாகப்பட்டினம் - சுர்ஜித் சங்கர்
  14.  தேனி - வீ.டி.நாராயணசாமி
  15.  மதுரை - டாக்டர் சரவணன்
  16.  ராமநாதபுரம் - பா.ஜெயபெருமாள்

மேலும் தேமுதிகவிற்கு திருவள்ளூர்,  கடலூர்,  தஞ்சாவூர்,  விருதுநகர்,  மத்திய சென்னை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  அதேபோல  எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும்,  புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும்  ஒதுக்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து இன்று அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Imageஅதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் :

  1. வேலூர் - டாக்டர் பசுபதி
  2. தருமபுரி - டாக்டர் அசோகன்
  3. திருவண்ணாமலை - எம்.கலியபொருமாள்
  4. கள்ளக்குறிச்சி - ரா. குமரகுரு
  5. நீலகிரி (தனி) - லோகேஷ் தமிழ்ச்செல்வன்
  6. திருப்பூர் - அருணாச்சலம்
  7. பொள்ளாச்சி - அப்புசாமி என்ற கார்த்திகேயன்
  8. மயிலாடுதுறை - பாபு
  9. ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம் குமார்
  10. தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி
  11. சிவகங்கை - சேகர்தாஸ்
  12. பெரம்பலூர் - சந்திர மோகன்
  13. திருநெல்வேலி - சிம்லா முத்துசோழன்
  14. கோவை - சிங்கை ராமச்சந்திரன்
  15. கன்னியாகுமரி - பசலியன் நசரேத்
  16. திருச்சி - பி. கருப்பையா
  17. புதுச்சேரி - தமிழரசன்

இதே போல்,  விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

Tags :
Advertisement