விவசாயிகளின் கவலைகளை போக்கியது அதிமுக அரசு என்ற சிறப்பு பெற்றோம் - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சியாக அதிமுக அரசு திகழ்ந்தது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தமிழர் திருநாளான தை மாதம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாளாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றன. தமிழர் கலாசாரத்தில் சிறந்த வரவேற்பை பெற்ற பொங்கல் திருநாள் இன்று நாடு முழுவதும் புது பானையில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த திண்டமங்கலம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். முன்னதாக, தொண்டர்கள் சூழ எடப்பாடி பழனிசாமி இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி விழா மைதானத்திற்கு வந்தார் . தொடர்ந்து 108 பானைகளில் பெண்கள் பொங்கல் வைக்க, அவர்களுடன் தானும் பொங்கல் வைத்து வழிப்பட்டார்.
அப்போது பேசிய அவர்; "விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் பண்டிகை பொங்கல் திருநாள். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்று முன்னோர்கள் கூறியது. தை பிறந்துள்ளது திருநாளில் மக்களுக்கு நல்ல வாழ்வு அமையும். இதையடுத்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு அளிக்கின்றவர்கள் விவசாயிகள்.
வெயில், மழையை பார்க்காமல் பயிரிட்டு விவசாயம் செய்து மக்களுக்கு அரிசி வழங்கும் விவசாயிகளின் உன்னதமான நாள் தை திருநாள். நானும் ஒரு விவசாயி தான். வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடும் போது எப்படி மகிழ்ச்சியப்படுகிறது. அதேபோன்று தற்போது மகிழ்ச்சியை அடைந்துள்ளேன்.கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு தான் தைத்திருநாளின் அருமை தெரியும்.
இதையும் படியுங்கள் : "தை பிறந்தால் வழி பிறக்கும்" - நாடு முழுவதும் தை திருநாள் உற்சாகம்..!
நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள் தான். எவ்வளவு கிராமங்கள் வளர்ச்சி அடைகிறதோ?, விவசாயிகள் உற்பத்தி பெரிதாகும் அப்போது நாடு வளர முடியும். அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்.
இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மக்கள் என்ன நன்மையை பார்த்தார்கள்? ஏழை எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக, இந்த காலத்தில் மக்களிடம் கொள்ளையடித்தது தான் திமுகவின் சாதனை. மேலும், நாட்டு மக்களை பற்றி கவலையில்லை. சிலர் சிறையில் உள்ளனர், பலர் சிறைக்குச் செல்ல இருக்கிறார்கள்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டு காலத்தில், எப்பொழுது திமுகவை வீட்டுக்கு அனுப்பவும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது காட்சிகள் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டும் தான் மிஞ்சியுள்ளது.
ஏழையின் மக்களுக்கு வழங்கும் நியாய விலைக் கடை பொருட்கள் முறையாக வழங்க வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.