மே.29, 30ம் தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
வரும் மே.29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
08:28 PM May 16, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே. 29, 30ம் தேதிகளில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டம் இரண்டு நாட்களும் காலை 9.30 மணி, பிற்பகல் 3.30 மணி என இரு நேரங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை, காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், திருச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.