Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஏப்.25ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ஏப்.25ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12:38 PM Apr 22, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரப்படுத்தி உள்ளன. பாஜக – அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளன. முன்பு பாஜக கூட்டணியில் இருந்த பாமக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாடு குறித்து இன்னும் தெரியவரவில்லை.

Advertisement

இந்த நிலையில், ஏப்.25ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், 25.4.2025 வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணிக்கு, மாவட்டக் கட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கட்சிச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கட்சிப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKAIADMKedappadi palaniswamiEPSnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article