"திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக, பாஜக உள்ளது" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி!
கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
"அதிமுக உடுமலை ராதாகிருஷ்ணன் குடும்ப விழாவில் கலந்து கொண்டோம். தமிழ்நாட்டில் பினாமிகளின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவது, முதல்வரா அல்லது தம்பிகளா? அரசு அதிகாரிகளுக்கு கட்டளையிடும் அளவிற்கு அந்த தம்பிக்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த தம்பிகள் தமிழகத்தை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தபடும் நிதிகளை எல்லாம் இவர்கள் தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ரத்திஷ் ,கார்த்திக் இவர்கள் எல்லாம் யார் என்பதை முதலமைச்சர் தமிழ்நாடு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்
புதுக்கோட்டைக்கு திருமாவளவனுடன் சென்று அம்பேதர் சிலை திறந்து வைத்த உதயநிதி வேங்கை வயல் பக்கம் சென்றிருக்களாம். அரக்கோணம் பெண்மணிக்கு நடந்த சம்பவத்திற்க்கு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அரசியலுக்காக தான் முதல்வர் டெல்லி சென்றார் என்று மக்கள் எண்ணி கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். ஆட்சி முடியும் தருவாயில் தான் டெல்லி சென்றுள்ளார்.
பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாடு வர வேண்டியது. தமிழ்நாடு வராமல் உத்தரபிரதேசம் சென்றுள்ளது. இந்த அரசாங்கம் தமிழகத்தை பின்னோக்கி சென்றுள்ளது. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக பாஜக கூட்டணி உள்ளது. இத்தனை ஆண்டுகள் வராதவர் தற்போது டெல்லிக்கு வந்தது வரவேற்கத்தக்கது, ஆனால் மக்கள் நலனுக்காக இத்தனை ஆண்டுகள் வராதவர் இப்போதாவது வந்துள்ளார். யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை யாரையும் மிரட்டவும் அவசியமில்லை.
பாரதிய ஜனதா கட்சி உலகத்தில் மிகப்பெரிய கட்சி, உலகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்டு இருக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி தான். பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்தியா முழுமைக்கும் திட்டத்த 80 சதவீதத்திற்கும் மேற்பட்டு ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம். மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. நாங்கள் யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.