நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சி!
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,000 மாணவர்களுக்கு நவீன் தொழில்நுட்ப முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 22 ஆயிரம் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1.80 ஆயிரம் மாணவர்கள் oracle நிறுவனத்தின் மூலம் இந்த பயிற்சியை பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், சேப், கூகுள், ஆரக்கல், இன்போசிஸ் போன்ற முன்னனி நிறுவனங்களின் மூலம் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் திட்டம் துவங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக oracle நிறுவனமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது.
மேலும் oracle நிறுவனம் மூலம் ஏ.ஐ. , இயந்திர கல்வி, பிளாக் செயின் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.