அகமதாபாத் விமான விபத்து - மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
ஏர் இந்தியாவின் AI 171 விமானம் கடந்ந ஜூன் மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 260 பயணிகள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால், விசாரணை நடத்தப்பட்ட விதம் அரசியல்சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், சமத்துவம் மற்றும் உண்மைத் தகவல்களை மீறுவதாக உள்ளது. மேலும், விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் முதற்கட்ட அறிக்கை, 'எரிபொருள் "cutoff switch " காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், விமானியின் பிழையை குறிப்பதாகவும் உள்ளது.
ஆனால் முழுமையான டிஜிட்டல் விமானத் தரவுப் பதிவு, நேர குறிப்புகளுடன் கூடிய முழு காக்பிட் குரல் பதிவு, transcript மற்றும் மின்னணு விமானத் தவறு பதிவு போன்ற முக்கியமான விமானத் தரவுகள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த விமான விபத்து தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும், உண்மையான காரணம் விழி கொண்டாடப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், "விபத்து நடந்து 100 நாட்களுக்கு மேலாகியும் அதற்கான காரணம் என்ன என்பது வெளிகொண்டாரப்படவில்லை. மேலும் அந்த விபத்திற்கான காரணம், அந்த சூழலில் விபத்தை தவிர்ப்பதற்காக என்ன செய்திருக்கலாம என்பது போன்ற வழிகாட்டுதல்களும் கூறப்படவில்லை.
இந்த சம்பவத்திற்கு பின் போயிங் விமானத்தில் பயணம் செய்யவே அச்சப்படுகின்றனர். மேலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட குழுவில் மூன்று பேர் டிஜிசிஏவில் பணியில் உள்ளனர். எனவே இந்த குழு மீது முழுமையான நம்பிக்கை இல்லை என்பதால் சுதந்திரமான, சுயாதீனமான ஒரு விசாரணை தேவைப்படுகிறது என தெரிவித்தார்
மேலும் முந்தைய முதற்கட்ட விசாரணையில் விமானியின் தவறு என்று கூறப்பட்டுள்ளது அதனைத் தான் ஊடகங்களும் வெளியிட்டு வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் ஒரு உண்மையை கண்டறியும் வகையிலும் முழுமையான ஒரு விசாரணை தேவை. நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும், அந்த குழுவுக்கு விமானம் தொடர்பான அனைத்து தரவுகளையும் வழங்கப்பட வேண்டும் என கோரினார். இதனை அடுத்து இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.