பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் நேற்று வரை ரூ.1000-க்கு விற்பனையான பூக்களின் விலை இன்று ரூ.3000 வரை அதிகரித்துள்ளது.
பூக்களின் விலை நிலவரம்:
மல்லிகைப் பூ ரூ.3000
பிச்சிப்பூ ரூ.2000
முல்லை பூ ரூ.2000
மெட்ராஸ் மல்லி ரூ.2000
சம்மங்கி ரூ.250
செவ்வந்தி ரூ.250
செண்டுமல்லி ரூ.100
அரளி ரூ.450
பன்னீர் ரோஸ் ரூ.300
பட்டன் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.