Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேளாண் நிதி நிலை அறிக்கை - மொத்தம் ரூ.42.28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

01:09 PM Feb 20, 2024 IST | Web Editor
Advertisement

வேளாண் நிதி நிலை அறிக்கை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மொத்த பட்ஜெட் ரூ.42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்  சட்டப்பேரவை கூட்டம்  நேற்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது காட்சிக்கு எளியன் என்ற திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை கூறி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் உரையை துவங்கினார்.  

இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன் பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். கிட்டத்தட்ட 144 பக்கம் நிதி நிலை அறிக்கையினை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக 2 மணி நேரம் 8 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.  காலை 10 மணியளவில் உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என்ற திருக்குறளுடன் வேளாண்  பட்ஜெட் உரையை துவங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இந்த வேளாண்மை பட்ஜெட்டில் கடந்த வருடம் மற்றும் இந்த வருடம் துறை ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விவரங்கள் குறித்து விரிவாக காணலாம்.

வேளாண்மைத் துறை : 

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ. 10,772,03,13

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ. 11,194,47,47

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை : 

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ. 1,395,21,44

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.1,621,60,32

வேளாண்மைப் பொறியியல் துறை

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.855,53,75

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.714,54,27

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.277,71,46

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.209,90,34

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.616,68,93

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.664,31,89

விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்புத் துறை

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.61,99,12

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.70,77,50

சர்க்கரைத்துறை

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.253,52,52

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.254,06,20

கால்நடை பராமரிப்புத்துறை

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.1,062,32,02

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.1,088,22,63

பால்வளத்துறை

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.122,66,87

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.581,91,81

மீன்வளம்-மீனவர் நலத்துறை (உள்நாட்டு மீன் வளம்)

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,356,61,54

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.1,320,96,85

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.374,10,95

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.346,14,64

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம், நாகப்பட்டினம்

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.52,83,17

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.48,99,29

கூட்டுறவுத் துறை (பயிர்க்கடன் போன்றவை)

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.350,00,00

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.700,00,00

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் (நேரடி நெல் கொள்முதல் நிலையம்)

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.10,501,74,96

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு  : ரூ.10,501,14,00

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.4,891,62,52

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.7,606,85,06

உணவு பதப்படுத்துதல் (MSME)

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.176,06,17

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.177,79,43

பட்டு வளர்ச்சித்துறை

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.90,59,90

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.111,12,28

வனத்துறை (வேளாண் காடுகள், மனித விலங்கு மோதல்)

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,087,19,81

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.1,107,93,55

வருவாய்த்துறை (மாநில பேரிடர் நிவாரண நிதி, பயிர் சேதம், உழவர் பாதுகாப்புத் திட்டம்)

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.369,50,52

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.379,36,67

கால்வாய்கள் புனரமைத்தல்- பெரும் பணிகள்

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.4,236,47,28

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.3,581,73,64

மொத்தம் நிதி

2023 -24 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.38,904,46,06

2024 - 25 ஆண்டில் ஒதுக்கீடு : ரூ.42,281,87,84

 

Tags :
AppavuBestCMBestBudgetBudgetBudget2024GovernorspeakerTamilnaduAssemblyTAMILNADUBUDGET2024ThangamThennarasuTNAgricultureBudget2024TNAssemblyTNAssembly2024
Advertisement
Next Article