For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

20 வருடங்களுக்கு பிறகு இறுதிப் போட்டியில் மோதும் இந்தியா - ஆஸ்திரேலியா... வெற்றி வாய்ப்பு யாருக்கு?

10:46 AM Nov 19, 2023 IST | Web Editor
20 வருடங்களுக்கு பிறகு இறுதிப் போட்டியில் மோதும்  இந்தியா   ஆஸ்திரேலியா    வெற்றி வாய்ப்பு யாருக்கு
Advertisement

20 வருடங்களுக்கு பிறகு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மோதும், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின், எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 குறித்த தொகுப்பை, தற்போது பார்க்கலாம்...

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில, இரண்டு பெரிய அணிகள் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கிறாங்க...

கோடிக்கனக்கான ரசிகர்களோட எக்ஸைட்மெண்ட்டோட நடக்க இருக்கிற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த இறுதிப் போட்டியில பாலுக்கும் பேட்டுக்குமான சண்டை இருந்தாலும், எந்த அணி பலமா இருக்குதுன்னு இந்த தொகுப்புல பாக்கலாம்.

ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட்... முதல்ல இந்தியா....

இந்திய அணியோட இந்த வோர்ல்ட்கப் கேம்பைன் ரொம்பவே சக்ஸஸ்புல்லான ஒன்னாதான் அமஞ்சிருக்கு... இறுதிப் போட்டி வரைக்குமான இந்த பயணத்தில இந்திய அணியில விளையாடிட்டு வர 15 பேரோட பங்களிப்புமே அபாரமான ஒன்னா இருந்திருக்கு...

சரி, இறுதிப் போட்டியில பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சந்திக்கப் போகிற இந்திய அணி இந்த 11 ஓட விளையாடுவாங்கன்னு எதிர்பார்க்கலாம். ஆமாம், கேப்டன் ரோகித் சர்மா லீடிங் ஃபிரம் தி ஃபிரண்ட், சூப்பர் மேன் சுப்மன் கில்லோட சேர்ந்து அதிரடியான தொடக்கத்த கொடுக்கிறதால, எதிரணியோட பவர்பிளே யுக்திகள் எல்லாம், இந்தியாவோட ஓபனிங் பேர்க்கு எதிரா எதுவும் ஒர்க்கவுட் ஆகுறது இல்ல.

இருந்தாலும் இந்த தொடரோட முதல் லீக் போட்டியில ஆஸ்திரேலியாவோட மோதின இந்திய அணி, முதல் பவர்பிளே ஓவர்கள்ல சருக்கினாங்க... ஆனா 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்திருந்தப்போ, பார்ட்னர்ஷிப் சேர்ந்த விராட் கோலி, கே எல் ராகுல் கூட்டணி இந்தியாவ முதல் போட்டியில வெற்றி பெற செஞ்சாங்க..

அந்த மாதிரி இந்திய பேட்டிங் லைனப்ல டாப் ஆர்டர் ரொம்பவே சிறப்பா விளையாடியிருக்காங்க... ஆஸ்திரேலியாவுக்கு எதிரா, அகமதாபாத் மைதானத்தில நிச்சயமா இந்தியாவுக்கு நம்பர் 7 வரைக்கும் நல்ல பேட்டிங் இருந்தா மட்டும் தான் ஒர்க்கவுட் ஆகும். அப்படி பாக்கும் போது, டாப் ஆர்டர்கள தாண்டி, லோயர் மிடில் ஆர்டர் பேட்டர்களா இருக்கிற சூர்யகுமார் யாதவ் மற்றும் ரவீர்ந்திர ஜடேஜா இந்தியாவோட லீதல் பினிஷர்களா இருப்பாங்கன்னு நம்பலாம்.

அடுத்தா பந்துவீச்சுன்னு சொல்லி பாக்கும் போது, இந்தியாவோட பந்துவீச்சு யூனிட் எதிர்த்து விளையாடின 9 அணிகளையுமே மிரட்டி இருக்காங்கன்னு சொல்லுறதுதான் சரி... குறிப்பா ஓபனிங்ல பவர்பிளே ஓவர்கள்ல கில்லியா இருக்கிற பும்ரா, எதிரனியோட ரன் ரேட்ட கட்டுக்குள்ள வச்சிக்கிற அதே நேரம், சிராஜ் மற்றும் ஷமி யோட கோல்டன் ஆர்ம்கள் இந்தியாவுக்கு விக்கெட்டுகள எடுத்து கொடுக்கிறாங்க...

முகமது சமியோட சீம் பொஷிஷன் மாறாத டெலிவரிகள், அகமதாபாத் பிட்ச்லையும் நிச்சயம் குரூஷியலா இருக்கும். தேவப்படுற நேரத்தில விக்கெட்ஸ் எடுக்கிற ஜடேஜா, எதிரனியோட ரன் ஃபுளோவ கொலாப்ஸ் பண்ணுற குல்தீப் யாதவ் அப்படின்னு ஓவ்வொருத்தரும் இந்தியாவோட நம்பிக்கையா இருக்காங்க.. ஆஸ்திரேலியாவோட மாஸ்டர் பிளானுக்கு எதிரான இந்தியாவோட ஆதிக்கம் நிச்சயமா சிறப்பானதா இருக்கும்.

அடுத்ததா, 5 முறை உலக சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவோட XI இப்படிதான் இருக்குன்னு எதிர்பார்க்கலாம்....

தத்தித் தத்தி குரூப் ஸ்டேஜ்கள்ல விளையாடின ஆஸ்திரேலியா, நாக் அவுட் போட்டிகள்னு வந்தா முழுசா கோதவுள இறங்கிடுறாங்க...

ஆஸ்திரேலியாவோட டாப் ஆர்டர்கள் நிச்சயமா டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ் ஸ்டீவன் ஸ்மித் இப்படின்னு ஸ்டிராங்கா இருக்காங்க..

இந்த தொடர்ல பவர்பிளே ஓவர்கள்ல அட்டாக்கிங்ல நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில இருக்கிற ஆஸி, இந்தியாவுக்கு எதிரா நிச்சயம் இந்திய பந்துவீச்சாளர்கள பாத்து ஆடனும்னு தான் நினைப்பாங்க...

டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இந்தியாவோட பவுளிங் அனாலிசிஸ நல்லா புரிஞ்சு வச்சிருப்பாங்க...

விக்கெட்டுகள் சரிவ சமாளிக்கிர மிடில் ஆர்டர் பேட்டர்கள் இந்தியாவுக்கு எதிரா நிதானமா ஆடினாலும், அப்போ அப்போ ரன் ரேட்ட சமாளிக்கிற மாதிரியான இன்னிங்ஸ தான் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஆடுவாங்க.. அதுக்கு பிறகு லோயர் ஆர்டர்ல இருக்கிற ஜோஷ் இங்லிஸ் மற்றும் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஒருவேளை டாப் ஆர்டர்கள் சரியா பங்களிப்பு கொடுக்கலனா, நின்னு விளையாடுற பிளானோட களமிறங்குவாங்க....

ஆஸ்திரேலியாவோட பந்துவீச்சு, இந்தியாவுக்கு எதிரா எப்போவுமே பலவீனமா அமைஞ்சது இல்ல... டாப் ஆர்டர்கள டார்கெட் பண்ணுற ஆஸ்திரேலியன் பந்துவீச்சாளர்கள் நிச்சயமா, ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி விக்கெட்டுகள சீக்கிரமா எடுக்கனும்னு நினைப்பாங்க.

அதே போல ஷ்ரேயாஷ் ஐயர் மற்றும் கே எல் ராகுலோட பேட்டிங்கிற்கு எதிரா நல்ல பிளானோடவும் வர வாய்ப்பு இருக்கு. ஆடம் ஜாம்பாவோட பந்துவீச்சு இந்தியாவுக்கு நல்லா ஆடி பழக்கம் இருந்தாலும், குயிக்கா செயல்படுற மேக்ஸ்வெல்லோட பார்ட் டைம் பவுளிங் ஆப்ஷன் இந்தியாவோட பேட்டிங் புளோவ கொஞ்சம் சிதைக்கவும் வாய்ப்பு இருக்கு.

ஆக மொத்தம் ஆஸ்திரேலிய அணியோட, இந்த தொடர்ல விளையாடிய பெஸ்ட்டான பிளேயிங் XI இந்தியாவுக்கு எதிரான போட்டியில களமிறங்குவங்கன்னு நம்பலாம்...

Advertisement