டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தமாக மூட முடிவு - ஆப்கானிஸ்தான் அறிவிப்பு..!
டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தலிபான் மேற்கொண்டது. தலிபான் ஆட்சிக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தங்களது நாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகங்களுக்கு சிறப்பு அதிகாரமும் வழங்கவில்லை.
இதனிடையே, இந்தியாவிடம் இருந்து தங்களுக்கு எந்த சிறப்பு உதவியும் கிடைக்கவில்லை என்றும், இதனால் எங்களின் வேலையை திறம்பட செய்ய முடியவில்லை என்றும் கூறிய ஆப்கானிஸ்தான், டெல்லியில் உள்ள தங்களது தூதரகத்தை மூடப்போவதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது.
இதையும் படியுங்கள் : “ராகுல் காந்தி கண்ணியமான பதிலை அளிப்பார்” - சுப்ரியா சுலே எம்.பி. நம்பிக்கை
மேலும், தூதரக அதிகாரிகளின் விசா புதுப்பித்தல் முதல் மற்ற பணி வரை, தங்களுக்கு தேவையான உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்றும், குழுவிற்குள் பல்வேறு பிரச்னைகள் எழுந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.