Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ADSP வெள்ளத்துரை மீதான பணியிடை நீக்க உத்தரவு ரத்து - தமிழக அரசு உத்தரவு!

07:10 AM Jun 01, 2024 IST | Web Editor
Advertisement

சிவகங்கையில் நடந்த காவல்நிலைய மரணத்தில் வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது ஐ.ஜி. விஜயகுமார், சந்தன கடத்தல் வீரப்பனை ஒடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டவர்.  அப்போது அவரது குழுவில் இருந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை.  இவர்,  வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் ஏ.டி.எஸ்.பி.யானவர்.  இவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் வழக்கில் கைதான ரவுடி,  மற்றும் மதுரையில் எஸ்.ஐ.க்களைக் குத்திய ரவுடிகளை என்கவுண்டர் செய்ததில் ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயர் பெற்றவர் ஆவார்.

அதே போல் 2003 ஆம் ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்துள்ளார்.  மேலும்,  புதுக்குளம் பாரதி, பிரபு ஆகியோர் வெள்ளத்துரையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  தற்போது திருவண்ணாமலை குற்ற ஆவணக் காப்பக ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.  நேற்று தன் பணியிலிருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் நேற்று முன்தினம் (மே.30) அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காவல்நிலைய மரணத்தில்,  வெள்ளத்துரைக்கு சம்பந்தம் இருப்பதாக கூறி உள்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த சஸ்பெண்ட் உத்தரவை உள்துறை அமைச்சகம் தற்போது ரத்து செய்துள்ளது.  இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  வெள்ளத்துரை மீதான மனித உரிமை ஆணையத்தில் உள்ள வழக்குகள் தொடர்பாக ஓய்வூதிய பலன்களில் ரூ.5 லட்சம் பிடித்தம் செய்து,  பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADSP VellaiduraiPolicesuspendTN Govt
Advertisement
Next Article