"2026 தேர்தலுக்குள் #ADMK ஒருங்கிணைப்பு நடக்கும்" - சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி!
2026 தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடக்கும் என சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது :
"எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்யும் முன், சபாநாயகர் தனபாலை முதலமைச்சராக்க சசிகலாவிடம் முன்மொழிந்தேன். தலித்தை முதல்வராக்கும் தமது கருத்தை விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
ஆனால் 35 தலித் எம்.எல்.ஏ.க்களே, தன்பாலை முதலமைச்சராக்க ஒத்துழைக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். 2026 தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணையும். எடப்பாடி பழனிசாமியை உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்புதான் நடக்கும்.
இதையும் படியுங்கள் : ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது #TNPSC!
திமுக மத்திய அரசோடு 24 மணி நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் நிதிகள் வருவது இல்லை. மோதல் போக்கை கைவிட்டு நிர்வாக ரீதியாக தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியால் பாதிக்கப்படுவது மக்கள் தான். எடப்பாடிக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. என்னை விட அவர் சீனியர் "
இவ்வாறு சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.